பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர். மகன் தி.மு.க.வில் இணைந்தார்

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர். மகன் ராஜேந்திரகுமார் இன்று தி.மு.க.வில் இணைந்தார்.

தி.மு.க.வில் எஸ்.எஸ்.ஆர். மகன்
தமிழகத்தின் மறைந்த பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இவரது மகன் எஸ்.எஸ்.ஆர். ராஜேந்திரகுமார். அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி.யான இவர் இன்று சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.வாகவும், எம்.பி.யாகவும் பதவி வகித்தவர். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியபோது அ.தி.மு.க.வில் இணைந்து எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version