100 நாள் வேலைக்கு 3 மாதங்களாக பணம் தராதது ஏன்? மத்திய அரசுக்கு திமுக கடிதம்!

100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கான சம்பளத்தை உடனடியாக தர வேண்டுமென திமுக வலியுறுத்தியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் மக்கள் கிராம சபைக் கூட்டங்களை திமுக நடத்தி வருகிறது. அவை வாயிலாக கிராமப்பகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறது.


இதுதொடர்பாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கடிதம் எழுதிய திமுகவின் பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, மக்கள் குறைகேட்கும் இக்கூட்டங்களில் பங்கேற்கும் பல்வேறு மாவட்டங்களில், கிராமப் பகுதி மக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்கள், அக்டோபர் மாதம் முதல் சென்ற மூன்று மாதங்களாக தங்களுக்கு ஊதியம் அளிக்கப்பட வில்லை என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர் எனக் குறிப்பிட்டார்.


நூறு நாள் வேலைத் திட்டம் என்று அழைக்கப்படும் இந்த கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வருவாயை உறுதிப்படுத்தும் திட்டமாகும் என்றவர்,
இதில் பணியாற்றிடும் மக்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்காமல், அதுவும் மூன்று மாதங்களாக வழங்காமல் தாமதம் செய்வது அந்த ஏழைத்தொழிலாளர்களின் அன்றாட வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் மறுத்து சிதைப்பதுடன் அவர்களை ஆரிருளில் தள்ளிவிடும் கொடுமை ஆகும் என்றும் விமர்சித்துள்ளார்.

read more: நல்லா இருக்கேன்: மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்


இந்த பிரச்சினையை மத்திய அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு தேவையான நிதியை வழங்கி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி வரும் அனைவருக்கும் மூன்று மாதங்களாக தராமல் நிறுத்தி வைக்க பட்டுள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Exit mobile version