கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணுவிடம் முதல்வர் உடல்நலம் விசாரிப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணுவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக உடல்நலம் விசாரித்தார்.

அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, தங்கமணி, நிலோபர் கபில் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டு, குணம் அடைந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.

இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

முதல்வர் நலம் விசாரிப்பு
இந்தசூழலில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அமைச்சர் துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்றார். பின்னர், காணொலி மூலமாக அவரது உடல்நிலை குறித்து அமைச்சரிடம் கேட்டறிந்தார். பின்னர், அவரது உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

Exit mobile version