சசிகலாவுடன் முதல்வர் சந்திப்பு ஒரு போதும் இந்த ஜென்மத்தில் நடக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை :
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27 ம் தேதி விடுதலை ஆனார். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்தநிலையில் கடந்த பிப்ரவரி 8 ம் தேதி அன்று பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா சென்னை திரும்பினார். மேலும், பயண கலைப்பு மற்றும் உடல்நிலை காரணமாக சசிகலா அவரது தி.நகர் வீட்டில் தன்னை தனிமை படுத்திக்கொண்டு ஓய்வு எடுத்து வருகிறார். மேலும் பிப்ரவரி 12 ம் தேதிக்கு பிறகு தனது ஆதரவாளர்களை சசிகலா சந்திக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
Read more – டி.டி.வி தினகரன் தசாவதாரமே எடுத்தாலும் அதிமுக அரசு பதறாது.. ஒரு போதும் சிதறாது.. முதல்வர் பழனிசாமி
ஏற்கனவே எஸ்.பி.வேலுமணி நாங்கள் அண்ணன்- தம்பி இன்று அடித்துக்கொள்வோம், சேர்ந்துகொள்வோம் என்று தெரிவித்தார். இவர் பேசியது பெரும் சர்ச்சையானது. எஸ்.பி.வேலுமணி பேசியது அதிமுக – அமமுக இணைப்பு தான் என்று பலராலும் பேசப்பட்டது. இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், உள்கட்சி பிரச்சினை குறித்து மட்டுமே எஸ்.பி.வேலுமணி பேசினார். சசிகலா குறித்து அவர் பேசவில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சசிகலாவுடன் முதல்வர் சந்திப்பு இந்த ஜென்மத்தில் நடக்காது என்றும், அதிமுக – அமமுக இணைப்பு என்பது ஒரு போதும் நிகழாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.