கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாரு – சீமானை வம்புக்கு இழுத்த அமைச்சர் பெரிய கருப்பன்

எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை ஆற்ற கூடியவராக சீமான் இருக்கிறார் என அமைச்சர் பெரிய கருப்பன் குற்றச்சாட்டியுள்ளார்.

நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சியை ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் திறந்து வைத்தார். நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் மகளிர் சுய உதவி குழுக்கள் சார்பில் கொலு பொம்மைகள், துணி, கைவினை பொருட்கள் விற்பனை கடைகள் 60 அமைக்கப்பட்டுள்ளன. அதை பார்வையிட்ட அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ கிராம பகுதியில் உள்ள பெண்கள் பயன்பெறும் வகையில் கருணாநிதி ஆட்சியில் 1989ல் மகளிர் சுய உதவி குழு உருவாக்கப்பட்டது. இடையில் வந்த ஆட்சியாளர்கள் அக்கறை எடுத்து கொள்ள வில்லை. தற்போதுள்ள முதல்வர், 2006ல் இந்த துறை அமைச்சராக முக ஸ்டாலின் இருந்த போது. 5.50 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டது.

100 வேலை வாய்ப்பு திட்டம் தொடர்பான சீமான் விமர்சனம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், சீமான் விமர்சனம் செய்தார் என்பதை விட அவர், எதை பற்றி விமர்சனம் செய்யாமல் இருக்கிறார் என்பது தான் ஏற்புடையதாக உள்ளது . எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை ஆற்ற கூடியவராக இருக்கிறார். கிராம பகுதி மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. பல லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது” என கூறினார்.

Exit mobile version