தனது காலில் சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு 2016ஆம் ஆண்டு நடந்த விபத்தில் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அதற்காக, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டிருந்தது. அந்த கம்பியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 2019ஆம் ஆண்டு நடைபெற்றது.
கடந்த டிசம்பர் 13ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கமல்ஹாசன் தேர்தல் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் அவர் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியும் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் மீண்டும் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில், ல ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் காலில் அறுவை சிகிச்சை செய்தேன். ஏற்கனவே செய்த அறுவை சிகிச்சை தொடர்ச்சியாக மற்றொரு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
read more: ரஜினி ரசிகர்கள் வேறு கட்சிகளில் இணைந்துகொள்ளலாம்!
அத்துடன், அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதால் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது. சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் என் பணிகளைப் புதிய விசையுடன் தொடர்வேன். மக்களை நேரில் சந்திக்க இயலாது என்றாலும் வீடியோ வழியாக பேசுவேன் என்றும் கூறியுள்ளார் கமல்ஹாசன்.