பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜூன் 21 முதல் 24 வரையிலான நாட்களில் அமெரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளார். அவரை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணியான ஜில் பைடன் ஆகியோர் முறைப்படி வரவேற்க்க தயாராகி உள்ளனர். இதன்பின் அவர்கள் இருவரும் வருகிற 22-ந்தேதி பிரதமர் மோடிக்கு விருந்தளிப்பு செய்கின்றனர். பிரதமர் மோடியின் வருகையை எதிர்பார்த்து அமெரிக்காநாடு முழுவதும் நியூயார்க் உள்பட 20 பெரிய நகரங்களில் இந்திய-அமெரிக்கர்கள் ஒன்று திரண்டு, அவரை வரவேற்கும் வகையில் ஒற்றுமை பேரணி ஒன்றை நடத்தினர். இந்த பேரணியில் சிறுவர் சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை பலரும் அணிவகுத்து சென்றனர். அப்போது சமூக மக்கள், இந்தியா மற்றும் அமெரிக்க நாட்டு தேசிய கொடிகளை ஏந்தியபடியும், பிரதமர் மோடியின் உருவம் கொண்ட போஸ்டர்கள் மற்றும் சமூகம் சார்ந்த பேனர்களை ஏந்தியும் அணிவகுத்தனர். அவர்கள் பேரணியின்போது, மோடி மோடி, வந்தே மாதரம் மற்றும் வந்தே அமெரிக்கா உள்ளிட்ட கோஷங்களையும் எழுப்பியபடி சென்றனர். இந்த பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது அவர்களில் சிலர், ஹர் ஹர் மோடி என்ற பாடலுக்கு நடனம் ஆடிப்பாடி ஆரவாரம் செய்தும் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமரை வரவேற்க்க ஒன்று திரண்ட இந்திய மக்கள்
-
By mukesh
Related Content
வெள்ளி வென்ற நீரஜ்!
By
daniel
August 9, 2024
உத்திரகாண்ட்டிலும் உயர்ந்தது தக்காளியின் விலை
By
mukesh
July 7, 2023
சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!
By
mukesh
July 6, 2023
ஷாருக்கானுக்கு படப்பிடிப்பு தளத்தில் நேர்ந்த விபத்து!
By
mukesh
July 4, 2023
சேலத்திற்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் அணி பந்துவீச்சு தேர்வு
By
mukesh
July 3, 2023
இன்றும் விலை உயர்வை கண்டது தக்காளி
By
mukesh
July 3, 2023