மக்கள் நீதி மய்யத்தில் இருந்து நாசரின் மனைவி கமீலா நாசர் ஏன் விலகினார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2018 ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியை உருவாக்கி பல முக்கிய நிர்வாகிகளை கட்சியில் இணைத்தார். கட்சி தொடங்கிய ஆரம்ப காலத்தில் இருந்து மக்கள் நீதி மய்யத்தில் நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் முக்கிய தலைவராக இருந்து பணியாற்றி வந்தார்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் போது மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மத்திய சென்னை பகுதியில் கமீலா நாசர் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். இருந்தும் தொடர்ந்து அக்கட்சியில் சென்னை மண்டலத்தின் மாநில செயலாளர் பதவி வகித்தார். மேலும் ஒரு பெண் அரசியலில் ஈடுபடுவது, அதிலும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண் அரசியலில் ஈடுபடுவது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இதனால் பொதுமக்களின் பார்வை கமல்ஹாசன் பக்கம் திரும்பியது.
இந்தநிலையில், நேற்று கமீலா நாசர் தனது பதவியை ராஜினாமா செய்ததோடு அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகவும், தனிப்பட்ட காரணத்திற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, கமீலா நாசர் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து ஏன் விலகினார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
Read more – இன்றைய ராசிபலன் 22.04.2021!!!
அதில், சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி வைத்தது தான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் கடந்த 2015 ம் ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நாசர் -விஷால் அணியினர் போட்டியிட்டபோது, அந்த கூட்டணிக்கு எதிராக ராதிகா, சரத்குமார் அணியினர் போட்டியிட்டனர்.
அப்பொழுது, ராதிகாவும், சரத்குமாரும் தன்னையும், தன் கணவரையும் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியதாகவும், அவர்களுடன் கமல்ஹாசன் நெருக்கம் காட்டி வருவதால் சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் தனது பதவியை ராஜினாமா செய்து கமலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதனால் தான் கமல்ஹாசனும் கமீலாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலக்கியதாகவும் கூறப்படுகிறது.