எங்களை எதுவும் தடுக்க முடியாது-நடிகை குஷ்பு டுவிட்

எங்களை எதுவும் தடுக்க முடியாது என்று நடிகை குஷ்பு டுவிட்டரில் பதிவி்ட்டுள்ளார்.

நடிகையும், சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தவருமான நடிகை குஷ்பு இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:–
தடுக்க முடியாது
மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. 2016-ம் ஆண்டு 4 சீட்டிலிருந்து 2020-ம் ஆண்டில் 48 சீட்கள். பா.ஜ.க.வின் இந்த அபார வளர்ச்சி பிரதமர் நரேந்திர மோடியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. 2021 தமிழக தேர்தலுக்குக் காத்திருங்கள். எதுவும் எங்களைத் தடுக்க முடியாது.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version