ஆன்லைன் சூதாட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இளைஞர் தற்கொலை
புதுச்சேரி, கோர்காடு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்ற 35 வயது இளைஞர், ஆன்லைன் சூதாட்டத்தில், கடன் வாங்கியும், தமது சொத்துகளை அடகு வைத்தும், வங்கி சேமிப்புகளை கரைத்தும் ரூபாய் 30 லட்சத்தை இழந்துள்ளார்.
அனைத்தையும் இழந்த நிலையில், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தமது தற்கொலையையே சாட்சியாக்கி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும்படியும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆன்லைன் சூதாட்டம்
மாநில எல்லைகளை கடந்து ஆன்லைன் சூதாட்டங்களும், அதில் பணத்தை இழந்தவர்களின் தற்கொலைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றைத் தடுக்க வேண்டிய அரசுகள், இவற்றை வேடிக்கை பார்க்கின்றன.
தடுக்க வேண்டும்
ஆன்லைன் சூதாட்டங்கள் உடனடியாக தடை செய்யப்படவில்லை என்றால், அடுத்த சில மாதங்களில் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்படும். அதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.