பா.ம.க இல்லாத கட்சியுடன் மட்டுமே கூட்டணி – பிரேமலதா விஜயகாந்த்

234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருப்பதாக  பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து இருக்கிறார். 

சென்னையில் தேமுதிக தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்,  துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்த சாரதி மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த் அ.தி.மு.க கூட்டணியில் உரிய மதிப்பளிக்காவிடில் தனித்துப்போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.  சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து நாளை முக்கிய முடிவை விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் போட்டியிட தயார் என்றும் அவர் தெரிவித்தார். 

கூட்டணி என்றால் பாமக இல்லாத கட்சியுடன் மட்டுமே கூட்டணி வைக்கவும் தே.மு.தி.க முடிவு செய்திருக்கிறது. எதிர்க்கட்சி வரிசையில் இடம் பிடிக்கும் அளவுக்கு மக்கள் செல்வாக்கு இருந்த தே.மு.தி.க, விஜயகாந்த் உடல்நிலை மோசமான பிறகு பின்னடைவை சந்தித்து வருகிறது. கடந்து முறை நடந்த தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தே.மு.தி.க தோல்வி அடைந்தது. இந்தமுறை 41 இடங்களை எதிர்பார்த்தாலும் அதிமுக 10 இடங்களை மட்டுமே தர முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Exit mobile version