‘எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ‘- துணை முதல்வர் ஓபிஎஸ் டுவீட்

எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்  ஓபிஎஸ் டுவீட்.

எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்  ஓபிஎஸ் டுவீட்.

தமிழக அரசியல் சூழல் எப்போதும் தலைப்புச் செய்திகளுக்குப் பஞ்சமில்ல்மால் தான் இருந்ததுள்ளது.

அதிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அக்கட்சியில் ஏற்பட்ட குழப்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சசிகலா இபிஎஸ்-ஐ முதல்ராக்கினார். அவர் முதல்வராக வேண்டி ஓபிஎஸை பதவி விலகச் செய்தனர்.

ஒருகட்டத்தில் ஒபிஎஸ் சசிகலாவிற்கு எதிராகக் கருத்துகளை தெரிவித்ததாக் இரண்டாக பிரிந்தது. பின்னர் சசிகலா சிறைக்குச் செல்லவே இபிஎஸ், ஒபிஎஸ் ஒன்றாக இணைந்தனர்.

ஐந்தாண்டு ஆட்சி முடிவடையும் நிலையில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது.

இதில் முதல்வர் வேட்பாளராக ஒ.பன்னீர்செல்வம் வரவேண்டுமென அவரது ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் இபிஎஸ்-தான் முதல்வர் வேட்பாளராக நிற்கவேண்டுமென கூறிவருகின்றனர்.

இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடுகள் நீடிக்கிறது. நாளை மறுநாள் முதல்வர் வேட்பாளரை அதிமுக அறிவிக்கும்முன் இன்று ஓபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும்  அவ்வாறே இருக்கும்.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!

எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version