திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் வரும் மே மாதம் தேர்தல் நடவுள்ளது. அதற்கான காரியங்கள் மற்றும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. அது மட்டுமின்றி அந்த அந்த கட்சியினர் அவர்களின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அதில் அதிமுக கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் அதுத தேர்தலில் யார் வேட்பாளராக தேர்ந்தெடுக்க படுவார் என அனைவரும் யோசித்து வந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமி என முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி இதை தொடர்ந்து பல்வேறு கூட்டங்களும் நடைபெற்று வருகின்றது.
இதற்கிடையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மூன்று மாவட்டங்களை பார்வையிட செல்ல உள்ளார். அணைத்து மாவட்டங்களிலும் கொரோன தடுப்பு பணிகள் நடந்து வருகின்றது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இவர் தற்போது மூன்று மாவட்டங்களுக்கு செல்ல ஆயத்தமாகி உள்ளார்.
அதுமட்டுமின்றி தற்போது அதிமுகவின் துணை முதலமைச்சர் ஆன பன்னீர் செல்வம் அவர்கள் தருபதிக்கு சென்றுள்ளார். சென்னையில் இருந்து நேற்று பகல் 2.45 மணிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காரில் திருப்பதி புறப்பட்டு சென்றார். மாலையில் கீழ் திருப்பதியில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு திருப்பதி மலைக்கு சென்றார். ஏற்கனவே, அங்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்த அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத் ஆகியோர் அவரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் இன்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்தார்.