ஜோ பைடன் போல மோடி தடுப்பூசி போட்டிருக்கலாம்: கே.எஸ்.அழகிரி

அமெரிக்க அதிபர் போல பிரதமர் மோடியும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டிருக்கலாம் என கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.

கோவேக்ஸின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளையும் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் நேற்று துவங்கியது. தமிழகத்தில் முதல் கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரை அரசு மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார்.


ஆனால் கோவாக்ஸின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை முடியாத நிலையில், அதற்குள் பயன்படுத்துவது ஆபத்தானது என பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் தெரிவித்தன. முழு சோதனையும் முடிந்த பிறகே தடுப்பூசியை செலுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தினர். இருந்தாலும் நேற்று மட்டும் தடுப்பூசி முதல் நாளான நேற்று 1,91,181 பயனாளிகள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.

கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது எனவும், மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்றால் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று தானே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர். மற்ற நாடுகளில் மக்களின் அச்சத்தை நீக்குவதற்காக பிரதமர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிகழ்வுகள் நடக்கின்றன. ஆனால், இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்கக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

read more: அதிமுக எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாது: ஸ்டாலின் பேச்சு


இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டரில் பிரதமருக்கு முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளார். “கோவிட்19 தடுப்பு ஊசியை அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடனும்,இந்தோனிசியாவில் அதிபர் ஜோகோவிடோடோவும் முதன்முதலாக அவர்களே போட்டுக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையை அளித்தனர். நமது பிரதமரும் அதை செய்திருக்கலாம்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version