இந்திய இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும்: பிரதமர்

இந்திய முழுவதுமுள்ள இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

உலகப் பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. வான் பொய்த்தாலும், வள்ளுவரின் குறள் பொய்க்காது என்பதற்கேற்க ஒன்றரை அடியில் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு சென்னை மயிலாப்பூரில் கோவில் உள்ளது.


திருவள்ளுவரை போற்றும் வகையில் இந்தியாவின் தென் கோடியான கன்னியாகுமரி கடலில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக பிரதமர் நரேந்திர மோடி தனது உரைகளில் திருக்குறளை மேற்கொள் காட்டி பேசி வருகிறார்.

இந்த நிலையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் தனது ட்விட்டரில், போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன். அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன என்று புகழாரம் சூட்டினார்.

read more: என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் குமுறல்!


மேலும், திருவள்ளுவரின் லட்சியங்கள் தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று தமிழில் வலியுறுத்தி பதிவிட்டுள்ளார்.
திருக்குறளை பிரதமர் போற்றி வரும் நிலையில், அதனை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு செவிசாய்ப்பாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

Exit mobile version