தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை கைவிட்ட ராமதாஸ்

தனி இடஒதுக்கீட்டுக்கு கோரிக்கையை கைவிடுவதாகவும், உள் ஒதுக்கீட்டில் பெரும்பகுதி வன்னியர்களுக்கு வர வேண்டுமென்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்டங்களாக நடைபெற்றுள்ள போராட்டங்கள் குறித்து விவாதிக்க இணைய வழியில் நேற்று நிர்வாகக் குழு கூட்டம் கூட்டம் கூடியது.


அதில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், மாநிலத் தலைவர் ஜி.கே. மணி, அரசியல் ஆலோசனைக்குழுத் தலைவர் தீரன், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, உறுப்பினர்களின் முழுமையான ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


20 சதவிகித இடஒதுக்கீடு டிசம்பர் 22ஆம் தேதி மூத்த அமைச்சர்கள் இருவர் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து ராமதாஸை சந்தித்து இது குறித்து பேச்சு நடத்தினார்கள். அப்போது வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு அடுத்த ஒரு வாரத்திற்குள் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தனர்.


மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீடு வன்னியர் சங்கம் போராடி, பல தியாகங்களை செய்து பெற்றது என்றாலும், அந்த இட ஒதுக்கீட்டை கடந்த 32 ஆண்டுகளாக அனுபவித்து வரும் பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு கொஞ்சம் கொடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது. அந்த நல்லெண்ணத்துடன் 20% இட ஒதுக்கீட்டில் பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு ஒரு பகுதியையும், வன்னியர்களுக்கு பெரும்பகுதியையும் ஒதுக்கீடு செய்யும் வகையில் தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை சற்று தளர்த்திக் கொண்டு, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் திட்டத்திற்கும் ராமதாஸ் ஒப்புதல் அளித்ததாக அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மூத்த அமைச்சர்கள் குழு நாளை மறுநாள் திங்கள்கிழமை மருத்துவர் அய்யா அவர்களை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்துப் பேசுவர் என்று அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், வன்னியர்களின் உள் ஒதுக்கீடு கோரிக்கையை முதல்வரும், துணை முதல்வரும் நிறைவேற்ற வேண்டும்.

read more: ரேஷன் கடைகள் முன்பு அதிமுக பேனர்கள் இருக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு!


இந்த நியாயமான, எளிய கோரிக்கையை பொங்கலுக்குப் பிறகு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்கு முன்பாக நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்ய தாமதமானால் பாமக செயற்குழுவை உடனடியாகக் கூட்டி, அரசியல் ரீதியிலான அடுத்தக்கட்ட முடிவை எடுப்போம் என அந்த தீர்மானத்தில் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version