சசிகலாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு பேரணி நடத்த அமமுக-வினர் திட்டமிட்டுள்ள நிலையில் சென்னை காவல்துறை அதற்கு அனுமதி மறுத்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை ஆனார். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஒரு வாரம் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட சசிகாலா வரும் 8-ம் தேதி சென்னைக்கு வரவுள்ளார். அவரை பிரம்மாண் முறையில் வரவேற்பதற்காக அமமுக கட்சியினர் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். சசிகலா வருகையை ஒட்டி அதிமுக நிர்வாகிகள் கூட வாழ்த்து போஸ்டர்களையும் ஒட்டி வருகின்றனர். சசிகலாவுக்கு சென்னையில் போரூர் முதல் வரவேற்பு பேரணி நடத்த அமமுக சார்பில் சென்னை காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் மனுவில் தெளிவான தகவல் இல்லை எனக்கூறி பேரணிக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.