புனித நீராடிய பிரதமர் மோடி!

உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார்.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த மாதம் 13ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இந்த திருவேணி சங்கமத்தில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கி, பிறவிப் பயனை அடையலாம் என பக்தர்கள் நம்புகின்றனர். இதுவரை கோடிக்கணக்கான பக்தர்கள் இந்த திரிவேணி சங்கமத்தில் பங்கேற்றுச் சென்றுள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் உயிரிழந்தனர்.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் இந்நிலையில் பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். அதன் பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். மகாகும்பமேளா வரும் 26ந் தேதி நிறைவடைகிறது.

Exit mobile version