பிப்ரவரி மாதம் 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். இந்த வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவி ஓராண்டுக்கு பிறகு மோடி தமிழகம் வர இருக்கிறார். மெட்ரோ ரெயில் விரிவாக்கம் மற்றும் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். கடந்த 18-ம் தேதி டெல்லி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை தமிழகம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடியின் வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி அமைத்து போட்டி போட இருப்பதால் அதுகுறித்தும் இருவரும் பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.