காக்கும் கரங்கள் திட்டம் – இன்று தொடக்கம்

ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வரை தொழில் கடன் வழங்கும் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

முன்னாள் படைவீரா்கள் தொழில் வாழ்வாதாரம் பெறும் வகையில், பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டம் மூலம் முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் மூலம் ரூ.1 கோடி வரையில் வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். மேலும், இத்திட்டத்தில் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும். அதற்கு முன்னதாக எந்த தொழில் செய்ய விரும்புகின்றாரோ அதில் திறன் மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சியும் அரசால் வழங்கப்படும். ராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரா்களின் கைம்பெண்களும் இத்திட்டம் மூலம் பயன்பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

Exit mobile version