புதுச்சேரியில் குடியரசு ஆட்சி அமல்படுத்தியதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை :
புதுச்சேரியில் நாராயணசாமியின் ஆட்சி பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது. மேலும், பிற கட்சிகள் எதுவும் ஆட்சி அமைக்க உரிமை கோராததால் மத்திய அமைச்சகம் குடியரசு ஆட்சி அமைக்க உரிமை கோரியது.
புதுச்சேரியில் 30 ஆண்டுகளுக்கு பின்பு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதாக ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரி நிர்வாகத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரடி பார்வையில் கவனிப்பார் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
Read more – இன்றைய ராசிபலன் 26.02.2021!!!
இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்து புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்திருக்கிறார்கள். ஜனநாயகத்தையே வெட்கப்படவைக்கும் இச்செயலுக்கு, குடியரசு என்ற பெயர் என்ன பொருத்தம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.