விலகிய காங்கிரஸ் தலைவர்…முதலமைச்சர் சரஞ்சித் சிங் சன்னி தலைமையில் கூடியது பஞ்சாப் அமைச்சரவை

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் ராஜினமா! அரசியல் குழப்பங்களை தீர்க்க முதலமைச்சர் சரஞ்சித் சிங் சன்னி தலைமையில் கூடியது பஞ்சாப் அமைச்சரவை.

டெல்லி, 2022ம் ஆண்டு பொதுதேர்தலை சந்திக்க உள்ள பஞ்சாப் மாநிலத்தை இப்போது காங்கிரஸ் தலைமையிலான அரசு வழிநடத்தி வருகிறது; வழக்கமாகவே தேர்தலுக்கு முன்பு கட்சிக்குள் குழப்பம் வரும் ஆனால் காங்கிரசை பொறுத்தவரை சோதனைக்கு மேல் சோதனையாக வருகிறது என மூத்த தலைவர்கள் கருத்து தெரிவிக்க தொடங்கியுள்ளனர். அதற்கு காரணம், சமீபத்தில் பஞ்சாப் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய அம்ரிந்தர் சிங் தனக்கு அரசியல் நெருக்கடி இருக்கிறது என கூறினார்.

அவர், மறைமுகமாக பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் சித்துவை சுட்டிக்காட்டினார். காரணம் இருவருக்கும் இடையில் பல மாதங்களாக பனி போர் நிலவி வருகிறது. முதலமைச்சர் பதவி விலகிய பின்பு அதையும் சமாளித்து புதிய முதலமைச்சர் தேர்வை எல்லாம் முடித்த காங்கிரஸ்க்கு நேற்று மீண்டும் ஒரு புதிய சோதனை ஏற்பட்டது!!



காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில தலைவராக ஜூலை மாதம் நியமனம் செய்யப்பட்ட சித்து நேற்று மாலை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் மட்டுமல்லம் இவருக்கு ஆதரவாக, பஞ்சாப் அமைச்சர் ரசியா சுல்தானா , மாநில பொதுச்செயலாளர் யோகிந்தர் திங்கிரா , பொருளாளர் குல்சார் இந்தர் சாஹல் மற்றும் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்த கவுதம் சேத் ஆகியோர் அடுத்தடுத்து பதவி விலகினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் தலைமை இதனை சரி செய்யும் பொறுப்பை முதலமைச்சர் சன்னியிடம் ஒப்படைதனர். நேற்று நள்ளிரவு வரை ராஜினாமா செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின்பு இன்று காலை 10.30 மணிக்கு பஞ்சாப் அமைச்சரவையை கூடியுள்ளது. இதில், கட்சியின் உட்கட்சி மோதல் குறித்தும், ஏற்கனவே ஒரு அமைச்சர் ராஜினாமா செய்து உள்ளதால் அவை குறித்தும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கிடக்க கூடிய தகவலின் படி, ராஜினாமா செய்த நால்வரின் கடிதமும் கட்சியின் தலைமையில் ஏற்று கொள்ளப்படாத நிலையில் அமைச்சரவையில் சரஞ்சித் ஆதரவாக சில மாற்றமும்! முடிவும்! எடுக்கலாம் என கூறப்படுகிறது.

Exit mobile version