ரஜினி ரசிகர்கள் வேறு கட்சிகளில் இணைந்துகொள்ளலாம்!

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அரசியல் கட்சிகளில் இணைந்துகொள்ளலாம் என மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என கடந்த டிசம்பர் மாதக் கடைசியில் அறிவித்தார். அதன்பிறகும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், தன்னை அரசியலுக்கு அழைத்து மேலும் புண்படுத்த வேண்டாம் என ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார்.


இதனிடையே ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தொடர்ச்சியாக மாற்றுக் கட்சிகளில் இணைந்து வந்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கே.செந்தில் செல்வானந்த், தேனி மாவட்ட செயலாளர் ஆர்.கணேசன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். இது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.


இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர், இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அவர் ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கையில், ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்து விட்டு அவர்கள் விருப்பம்போல எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

read more: பாஜக-அதிமுக கூட்டணி துடைத்தெறியப்படும்: கே.எஸ்.அழகிரி


அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் விடக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version