சிலிண்டர் வெடித்து தரைமட்டமான வீடுகளை கட்டித்தர வேண்டும் தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

ஆரணியில் சிலிண்டர் வெடித்து தரைமட்டமான வீடுகளை கட்டித்தர தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிலிண்டர் வெடித்து பலி
திருவண்ணாமலை, ஆரணியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் சிறுவன் உள்ளிட்ட மூவர் உயிரிழந்ததாகவும், 5 பேர் படுகாயமடைந்தது வேதனை அளிக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

மிகவும் பாதுகாப்பாக கையாளும் வரை நமக்கு உதவியாக இருக்கும் சமையல் சிலிண்டர்கள், பாதுகாப்பில் அலட்சியமாக இருந்தால் நமது உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானவை.

வீடு கட்டித்தர வேண்டும்
ஆரணி எரிவாயு சிலிண்டர் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அவர்கள் அனைவரும் முழுமையான உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும்.

உயிரிழந்தவர்கள் அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வீதமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதமும் நிதி உதவி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி சிலிண்டர் வெடித்து தரைமட்டமான வீடுகளை கட்டவும் அரசு நிதியுதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version