கொள்கைத் தலைவருக்கு மதியத்திற்கு மேல் மரியாதை!

தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்ற பெருமைக்குரியவர் காமராஜர் என தவெக தலைவர் விஜய் மதியம் 2 மணிக்கு மேல் புகழாரம் சூட்டியுள்ளார்.

கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்ட காமராஜரின் சிலைக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மதியம் 2 மணிக்கு மேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பனையூரில் வைக்கப்பட்டுள்ள காமராஜரின் சிலைக்கு மரியாதை செலுத்திய பின், காலத்தாலும் களவாட முடியாத கருவூலம் கல்வி தான் என்பதை அன்றே கணித்து, தமிழகத்தில் கல்விச் சாலைகள் கட்டமைத்தவர். உழவர் பெருங்குடி மக்களின் உள்ளங்கள் குளிர, பாசனப் பயன்பாட்டுக்கு அணைகளைக் கட்டியவர். வீடு உயர்ந்தால் நாடு உயரும் என்று வேலைவாய்ப்புகளைப் பெருக்கத் தொழிற்சாலைகளை உருவாக்கியவர். தன்னலமற்ற சேவைகளால் தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்.

கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், தமது ஆட்சியில் மசச்சார்பின்மையையும் நிர்வாகத்தில் நேர்மையையும் கடைப்பிடித்தவர். சமூகநீதிக் கொள்கை வழியில் எளியவர்களுக்கும் அதிகாரமளித்து, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்ற பெருமைக்குரியவர் என தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version