2017 ம் ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி என்று சிவில் நீதிமன்றத்தில் சசிகலா முறையீடு செய்துள்ளார்.
சென்னை :
தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மிகப்பெரிய ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் தேர்தல் என்பதால் தேர்தல் களம் தொடர்ந்து சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மேலும், எந்தந்த கட்சிகள் யாருடன் கூட்டணி வைக்க உள்ளனர் என்ற பதட்டமும் நிலவி வருகிறது.
இந்தநிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விடுதலையான சசிகலா கொரோனா சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பினார். அவருக்கு அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சசிகலா வருகை தமிழக அரசியலில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
Read more – இன்றைய ராசிபலன் 18.02.2021!!!
தற்போது, சசிகலா அதிமுக கட்சியை அடைவதற்கும், முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு தொல்லை கொடுக்கும் வகையிலும் புதிய வியூகம் ஒன்றை அமைத்துள்ளார். அதன்படி, கடந்த 2017 ம் ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி தொடர்ந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சிவில் நீதிமன்றத்தில் சசிகலா மேல் முறையீடு செய்துள்ளார். இந்த முறையீடானது வரும் மார்ச் 15 ம் தேதி விசாரிப்பதாக சிவில் நீதிமன்றம் அறிவித்துள்ளது. சசிகலாவின் இந்த மேல் முறையீட்டால் அதிமுக கட்சிக்குள் சலசலப்பு நீடித்து வருகிறது.