சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை- தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தமிழகம் திரும்பியிருந்தார் சசிகலா.

இந்த நிலையில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியானது சென்னையில் உள்ள முத்தையா செட்டியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அப்போது, “சசிகலா தனது காரில் அதிமுக கொடியைப் பயன்படுத்துவது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கும், அவருடன் இருக்கும் யாருக்கும், அதிமுகவுடன் எந்த தொடர்பும் இல்லை. கட்சியினரைத் தவிர வேறு யாரும் அதிமுக கொடியைப் பயன்படுத்துவது என்பது சட்டவிரோதம்” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “சசிகலா திரும்பி வருவதால் ஆளும் கட்சியினருக்கு பதற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, அவரது வருகை குறித்து பதற்றமடைய எங்களுக்கு எந்த அவசியமும் இல்லை. தினகரன்தான் அச்சம் கொள்ள வேண்டும். ஏனெனில் பல விஷயங்கள் குறித்து சசிகலா எழுப்பும் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும். காதுக்கு பூ சுத்தும் வேலையை டி.டி.வி.தினகரன் செய்வார்” என்றார்.

மேலும் அதிமுகவில், `தலைமை முதல் அடி மட்டம் வரை அனைவரும் ஒத்த கருத்தில் தான் உள்ளனர். யார் நினைத்தாலும் எங்கள் ஒற்றுமையை சீரழிக்க முடியாது’ என்று தெரிவித்தார். மேலும் தி.மு.கவின் பி டீம் தான் டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா என குற்றமும் சுமத்தினார் அவர்.

“அ.தி.மு.கவில் ஸ்லீப்பர் செல் கிடையாது. ஆனால், அ.தி.மு.கவில் சில எட்டப்பன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தினகரனும் சசிகலாவும் அ.தி.மு.கவிற்கு விசுவாசமாக இருந்தால் இடைத்தேர்தலில் போட்டியிட்டிருக்க மாட்டார்கள். ஆனால் போட்டியிட்டார்கள் என்று அவர் குற்றம் சாட்டினார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்” என்றும் கூறினார் அவர்.

சசிகலா மற்றும் அவருடன் இருப்பவர்கள் யாருக்கும் அதிமுகவுடன் எந்தத் தொடர்புமில்லை என்பது போன்ற தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ள கருத்து, பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Exit mobile version