இந்த மிரட்டுற வேல எல்லாம் என்கிட்ட வேணாம்… செஞ்சுருவேன்… உதயநிதிக்கு வந்த நேரடி மிரட்டல்…!

savukku sankar

திமுகவில் மு.க.ஸ்டாலின் அலங்கரித்து வந்த இளைஞரணி செயலாளர் பதவியை தற்போது அவருடைய மகன் உதயநிதி ஸடாலின் வகித்து வருகிறார். இதற்கு முன்னதாக மாவட்ட செயலாளர்கள் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் உதயநிதி ஸ்டாலின் மூக்கை நுழைப்பதாகவும், இனி அந்த மாதிரி விஷயங்களில் எல்லாம் தலையிட வேண்டாம் என உதயநிதியிடம் ஸ்டாலின் கண்டிப்பு காட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின. அதை உறுதிபடுத்தும் விதமாக திமுகவில் இருந்து பறந்த சிட்டிங் எம்.எல்.ஏ.கு.க.செல்வமும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளரும், திமுக ஆதரவாளர் எனக்கூறப்படும் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளது திமுக தொண்டர்களை கொதிப்படைய வைத்துள்ளது. அதிமுக, பாஜகவை படுபங்கமாக விமர்சிக்கும் சவுக்கு சங்கர், எப்போதுமே திமுகவை மட்டும் சாப்ட் கார்னர் காட்டி வந்தது அனைவரும் அறிந்த விஷயமே.

இதனிடையே திடீரென தனது ட்விட்டர் பக்கத்தில், கலைஞர் கிட்ட அரசியல் பண்ணுனவன் டா மயிரே @Udhaystalin
நான் யாருன்னு உங்க அப்பா கிட்ட கேளு. இந்த மெரட்டுற வேலை மயிரை இனி பண்ணாத. சுஜய், ரத்தீஷ், கார்த்தி, எல்லாரையும், பாத்துக்குட்டுத்தான் இருக்கோம். செஞ்சுருவேன். மூடிட்டு இரு. ரத்தீஷ் அண்ணன் யாருன்னு எனகக்கு தெரியாதா ? என ஒருமையில் படுபயங்கரமாக சாடியிருப்பது உடன்பிறப்புகளின் உதிரத்தை கொந்தளிக்க வைத்துள்ளது. இதனால் கடுப்பான திமுக தொண்டர்கள் பலரும் சவுக்கு சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Exit mobile version