ஏழாமாண்டு நினைவுப் பேரணி!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஏழாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஏழாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அவரது நினைவை போற்றும் வகையில் திமுகவினர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும் அமைதி பேரணியில் மேற்கொண்டனர். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் நோக்கி திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைதி பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் செல்லும் வழி நெடுகிலும் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் ஆங்காங்கே திட்டங்களை விளக்கும் வகையில் அந்தத் திட்டத்தால் பயன்படுத்த அவர்கள் நின்று மு.க.ஸ்டாலினை வரவேற்றனர். முன்னதாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலைஞர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Exit mobile version