இலங்கை அமைச்சருக்கு பாடம் புகட்ட வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மகிழ்ச்சி அளிக்கிறது என்ற இலங்கை அமைச்சருக்க பாடம் புகட்ட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மகிழ்ச்சி அளிக்கிறது என்ற இலங்கை அமைச்சருக்க பாடம் புகட்ட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தகுதியற்ற அமைச்சர்
தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. அவர் மனிதத்தன்மையற்ற ‘சாடிஸ்ட்’ மனப்பான்மை கொண்டவர்.

ஒரு நாட்டின் அமைச்சராக இருந்துகொண்டு இன்னொரு நாட்டின் மீனவர்கள் மீது நடத்தப்பட்ட சட்டவிரோதத் தாக்குதலை நியாயப்படுத்திப் பேசுவது தவறு ஆகும். அமைச்சராக இருக்க டக்ளஸ் தகுதியற்றவர்.
பாடம் புகட்ட வேண்டும்
இந்தியாவுடனான ஒப்பந்தத்திற்கு எதிரான ஒரு செயலை, இலங்கை அமைச்சர் நியாயப்படுத்துகிறார். அது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகும். இதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது. இதற்காக இலங்கையை இந்திய அரசு மிகக்கடுமையாக கண்டிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, டக்ளஸ் தேவானந்தா மீதான குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி தமிழ்நாட்டுக்கு எதிராகவோ, இந்தியாவுக்கு எதிராகவோ பேச அஞ்சும் அளவுக்கு டக்ளஸ் தேவானந்தாவுக்குப் பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version