ஆட்சி மாற்றம் வருவது அதிமுகவினருக்கே தெரிந்துவிட்டது: ஸ்டாலின்

ஆட்சி மாற்றம் வரப்போகிறது என்று அதிமுக அமைச்சர்களுக்கே தெரிந்துவிட்டதாக ஸ்டாலின் பேசினார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்துக்குட்பட்ட அவளிவநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார்.அப்போது பேசிய ஸ்டாலின், “இன்னும் நான்கு மாதங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஆட்சிமாற்றம் வரப்போகிறது. இந்த நான்கு மாதங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நீங்கள் தயாராகி விட்டீர்களா?”என்று மக்களை நோக்கி கேட்க, தயார்… தயார்… என்று அவர்கள் பதில் அளித்தனர்.


எடப்பாடி பழனிசாமி தொடங்கி அனைத்து அமைச்சர்களும் முறைகேடு செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். இன்னும் நான்கு மாதங்கள்தான் இருக்கிறது. நிச்சயம் ஆட்சிக்கு அவர்கள் வரப் போவதில்லை. அது நம்மை விட அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.அதனால் இயன்றவரை இருப்பதை எல்லாம் சுருட்டிக் கொண்டு, கொள்ளையடித்துச் சென்றுவிட வேண்டும் என்று திட்டமிட்டு அந்தச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என குற்றம்சாட்டிய ஸ்டாலின்,


முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் ஒரு விவசாயி நான் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு ரவுடி தான், எப்பொழுதும் நான் ஒரு ரவுடி நான் ஒரு ரவுடி என்று சொல்லிக் கொண்டே இருப்பான். விவசாயி எனச் சொல்லும் முதல்வர் வேளாண் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றினாரா என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

read more: அரசியல் சண்டைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவது ஏன்? உயர் நீதிமன்றம்


எடப்பாடி பழனிசாமி பெரிய சாதனை மனிதரைப் போல, கோடி கோடியாக செலவு செய்து, ஊடகங்களில் விளம்பரம் செய்கிறார். யாருடைய பணத்தை எடுத்துச் செலவு செய்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.நாம் எதற்காக வரி செலுத்துகிறோம்? நமக்கு நல்ல திட்டங்கள் வர வேண்டும். அது மக்களுக்கு பயன் தர வேண்டும். ஆனால் இன்றைக்குத் தனிப்பட்ட முதலமைச்சருக்கு, தனிப்பட்ட அமைச்சர்களுக்குப் பயன்படும் வகையில் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உரையாற்றினார்.

Exit mobile version