மோடியே வந்தாலும்..கிராம சபையில் ஸ்டாலின் சவால்!

மோடியே வந்தாலும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நிறுத்த முடியாது என திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று கடந்த 20ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தில் நடந்த கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டு பேசினார்.


ஆனால் திமுகவின் கூட்டங்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி தடை விதித்தது. கிராம சபை பெயரில் அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்தக் கூடாது எனவும், மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. எந்தத் தடை வந்தாலும் கூட்டத்தை நடத்துவோம் என அறிவித்த ஸ்டாலின், கிராம சபை பெயரை, மக்கள் கிராம சபை என மாற்றி நடத்த திமுகவினருக்கு அறிவுறுத்தினார்.


அதேபோல விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இன்று நடந்த மக்கள் கிராம சபை நிகழ்விலும் ஸ்டாலின் கலந்துகொண்டார். அங்கு மக்களின் கோரிக்கைகளை கேட்டதோடு, திமுக ஆட்சிக்கு வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் தந்தார்.
பின்னர் உரையாற்றிய ஸ்டாலின், திமுக மீது நம்பிக்கை வைத்து உங்கள் குறைகளை என்னிடம் கூறியுள்ளீர்கள். ஆட்சியில் இல்லாவிட்டாலும் திமுகதான் ஆளும்கட்சியாக இருந்துவருகிறது. நாம் சொல்வதைத்தான் அதிமுக அரசு செய்துவருகிறது எனத் தெரிவித்தார்.

read more: ரத்த அழுத்தப் பிரச்சினை: மருத்துவமனையில் ரஜினிகாந்த்


அதிமுகவை நிராகரித்து திமுகவை ஆட்சிக்கு கொண்டுவருவதே நம் லட்சியமாக இருக்க வேண்டும் கூறிய ஸ்டாலின், கிராம சபைக் கூட்டம் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டு, திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்த முயல்கிறது அதிமுக அரசு. இதனால்தான் மக்கள் கிராம சபை என்ற பெயரில் நடத்துகிறோம். பயந்து பெயரை மாற்றியதாக நினைக்கக்கூடாது. மக்கள் சபை கூட்டத்திற்கு தடை விதித்தால் அதையும் கடந்து நடத்துவோம். மோடியே வந்தாலும் தடுக்க முடியாது என உரையாற்றினார்.

Exit mobile version