தலைமைச் செயலகத்தில் பரபரப்பு… திடீர் விசிட் அடித்த ஸ்டாலின்… ஆடிப்போன அதிகாரிகள்!


தலைமைச் செயலகத்தில் திடீர் விசிட் அடித்த ஸ்டாலினால் பரபரப்பு.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே மக்களுக்காக பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். குறிப்பாக மக்களின் குறைகளை கண்டறிவதற்காக ஸ்டாலின் தொடங்கிவைத்த “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த துறைக்கென தனி ஐ.ஏ.எஸ். அதிகாரியும் நியமிக்கப்பட்டு, நாள்தோறும் குவியும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதே போல் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் தமிழகம் முழுவதில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் மனு அளித்து வருகிறார்கள். இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிப் பிரிவில் உள்ள பொதுமக்கள் மனு கொடுக்கும் பகுதிக்கு திடீர் விசிட் அடித்துள்ளார்.

இதைப் பார்த்து அங்கிருந்த மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அப்போது அங்கு குவிந்திருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்த ஸ்டாலின், அவர்கள் கொடுத்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் தனிப்பிரிவுக்கு வரும் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?, அங்குள்ள அதிகாரிகள் மக்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது குறித்தும் ஸ்டாலின் கேட்டறிந்தார். முதல்வரின் இந்த திடீர் விசிட்டால் தலைமைச் செயலக ஊழியர்கள் ஆடிப்போயுள்ளனராம்.

Exit mobile version