சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்கள் நீதிமய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது;-
புறநகர் ரயில்கள்
இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்விச் சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. ஏழை மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல நம்பி இருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.