தமிழக அரசியலில் பரபரப்பு… முக்கிய கட்சியின் மூத்த தலைவருடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரடியாக அரசியலில் களம் காண வேண்டுமென அவரது ரசிகர்கள் வேண்டாத தெய்வம் இல்லை. இதோ வர்றேன், அதோ வர்றேன் என ஆண்டுகளை வளர்த்து வந்த ரஜினிகாந்த் கடைசியாக கடந்த ஆண்டு அரசியலிலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, அதன் பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக அதனை வாபஸும் வாங்கிவிட்டார்.

அதன் பின்னர் நிரந்தரமாக இனி அரசியலில் இறங்கமாட்டேன் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுவிட்டார். அத்தோடு சரி சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். என்ன தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இல்லாவிட்டாலும், அரசியல் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் நல்ல நட்பு பாராட்டி வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேப்டன் விஜயகாந்த் உள்ளிட்டோரது பிறந்தநாளில் போன் செய்து வாழ்த்து கூறுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

தற்போது தமிழக மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய மற்றும் மூத்த தலைவரான டி.கே.ரங்கராஜனை அவரது 80வது பிறந்தநாளை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Exit mobile version