முக்கிய பிரச்சினைகள் குறித்து டெல்லியில் பேச்சுவார்த்தை

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்.  

பிரதமர் மோடியை அவர் நாளை காலை சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள், நிதியுதவி தொடர்பான கோரிக்கை மனுவை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிவர் புயல், புரெவி புயல் மற்றும் கடந்த வாரம் பெய்த கனமழையினால் ஏற்பட்ட சேதங்களுக்காக நிவாரண உதவி கோர இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசுகிறார். அமித்ஷாவுடனான சந்திப்பு, கூட்டணி குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையை தொடங்குவதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க முதலமைச்சர் கோரிக்கை விடுக்க இருப்பதாகவும்  கூறப்படுகிறது.

Exit mobile version