புதுவையே சாட்சி.. தமிழகத்திலும் தொடரும் திமுக, காங்கிரஸ் வீழ்ச்சி.. பாஜக தலைவர் எல். முருகன் பேச்சு

புதுவையை போல் தமிழகத்திலும் திமுக, காங்கிரசை மக்களுக்கும், அவர்கள் கட்சியினருக்கே பிடிக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை :

புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக ஆளுநரிடம் நாராயணசாமி கடிதம் வழங்கினார். இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கூறியதாவது,

காங்கிரஸ் கட்சிக்கு தவறை செய்து விட்டு பழியை மற்றவர்கள் மீது சுமத்துவது வாடிக்கைதான். அதை தான் புதுவை முதல்வர் நாராயணசாமியும் செய்துள்ளார். கவர்னர் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு அவரது வேலையை செய்பவர். அதில் யாரும் தலையிட முடியாது. அதனால்தான் புதுவையில் நடந்த ஆட்சி அவர்களது சொந்த கட்சியினருக்கே பிடிக்காமல் ராஜினாமா செய்து இருக்கிறார்கள்.

தி.மு.க.வின் நிலைப்பாடும் சரியில்லை. இந்து விரோத, தேசவிரோத கட்சியாக செயல்படுகிறது. எனவேதான் அந்த கட்சியினருக்கே பிடிக்கவில்லை தான் அதனால் ராஜினாமா செய்து இருக்கிறார்கள்.

Read more – ஆட்சியை தக்க வைக்க அதிமுக பட்டபாடு பெரும்பாடு : ரகசியத்தை கொட்டி தீர்த்த அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழக தேர்தலிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மக்களுக்கு பிடிக்கவில்லை அதனால் இதற்கான பதிலை தேர்தல் மூலம் அறிவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version