வேளாண் சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் டெல்லி போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பங்கேற்போம்

வேளாண் சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் டெல்லி போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பங்கேற்போம் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் டெல்லி போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பங்கேற்போம் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, திருவாரூரில் விவாயிகள் போராட்டம் நடத்தினர். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியாவது:-
வேளாண் சட்டம்
புதிய வேளாண் சட்டம் விவசாயிகளுக்குப் பயன் அளிக்கும் என்கிற பெயரில் விவசாயத்தை அழிக்கக்கூடிய திட்டங்களைச் சட்டமாக்கி பிரதமர் அறிவித்திருக்கிறார் இந்தச் சட்டம் மூலம் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயத்தை மத்திய அரசு முற்றிலும் கைவிட்டு நெல் கோதுமை கொள்முதல் செய்வதை முற்றிலும் கைவிட முயல்கிறது.

கொள்கை முடிவு
இந்தச் சட்டம் அமலுக்கு வரும் நிலையில் வருகிற பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற பட்ஜெட்டுக்குப் பிறகு தமிழ்நாட்டிலும் நெல் கொள்முதல் முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும். இந்தச் சட்டத்திற்குத் தமிழக முதல்வர் ஆதரவு அளித்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு செய்கிற மிகப்பெரிய துரோகம். இதனை முதல்வர் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

போராட்டத்தில் பங்கேற்போம்
பிரதமர் மோடி போராடுகிற விவசாயிகளை அழைத்துப் பேசி வருகிற 3ஆம் தேதி தீர்வு காணுவார். இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவார் என்று எதிர்பார்க்கிறோம். மறுக்கும் பட்சத்தில் டெல்லி போராட்டத்தில் தமிழக விவசாயிகளும் பங்கேற்று ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளும் ஒன்றுபட்டு மோடி அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version