துரைமுருகன் உங்கள படிக்கவச்சதே எம்.ஜி.ஆர். தான் மறந்துட்டீங்களா?… கடுப்பான முக்கிய பிரமுகர்!

எம்ஜிஆர் குறித்து அவதூறாக பேசியதற்காக அமைச்சர் துரைமுருகன் பகிரங்க மன்னப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான துரைமுருகன் அக்கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். மறைந்த முதல்வர் அண்ணாதுரை, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் க. அன்பழகன் ஆகியோர் வகித்துவந்த பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ள துரைமுருகன், 65 ஆண்டுகளுக்கு முன் திமுக உறுப்பினராக தம்மை இணைத்து கொண்டதில் இருந்து பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளது வரையிலான அவரது நீண்டநெடிய அரசியல் பயணத்தை மேற்கொண்டு இருப்பவர். திமுக மீது அதிக பற்று கொண்டவராக துரைமுருகன் இருந்தாலும், மறைந்த முதல்வர் எம்ஜிஆர், துரைமுருகனின் நலம்விரும்பாக திகழ்ந்தார். இதன் காரணமாக அவர் சென்னை தங்கி படித்த காலத்தில் துரைமுருகனின் உள்ளூர் பொறுப்பாளராக எம்ஜிஆர் இருந்தார். அத்துடன், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளநிலை. முதுநிலை பட்டப்படிப்பு படித்தபோதும், சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். படித்தபோதும் ஆறு ஆண்டுகள் துரைமுருகனின் படிப்பு செலவையும் எம்ஜிஆர் ஏற்றுக் கொண்டிருந்தார்.
இந்த விஷயத்தில் பல பொது இடங்களில் துரைமுருகன் அவர்களே, சொல்லியிருக்கிறார்.

மேலும் தனது அரசியல் பணயத்தில் எந்த ஒரு சூழ்நிலையிலும் எம்ஜிஆர் குறித்து தவறாக பேச மாட்டோன் என்பதையும் பல முறை பொதுதளங்களில் துரைமுருகன் பதிவு செய்துள்ளார். ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டு, செப் 28-ம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ளாட்சி தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் துரைமுருகன் பேசும் போது, எத்தனை காலத்துக்குதான் துரோகிகளையே பார்த்துக்கொண்டிருப்பது. அண்ணா காலத்தில் சம்பத்தைப் பார்த்தோம். அதன்பின் எம்.ஜி.ஆரைப் பார்த்தோம். பிறகு வைகோவை பார்த்துள்ளோம். இனிமேல் அப்படி பார்த்துக்கொண்டிருக்கமாட்டோம் என பேசியிருக்கிறார். திமுகவில் கணக்கு கேட்டதற்காக புரட்சிதலைவர் எம்ஜிஆரை கட்சியிலிருந்து நீக்கியவர் கருணாநிதி அவர்கள் என்பது துரைமுருகனுக்கு நன்றாக தெரியும்.

கோடான கோடி எம்ஜிஆர் தொண்டர்களை துரைமுருகன் பேச்சு கொதிப்படைய செய்துள்ளது. புரட்சிதலைவர் எம்ஜிஆர் குறித்து மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் பேசியிருப்பதை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. என்பது திருவள்ளுவரின் வாக்கு ஏற்ப துரைமுருகனின் செயல் அமைந்துள்ளது. எம்ஜிஆர் தொண்டர்களை மனவேதனை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் அவர்கள், காலதாமதம் செய்யாமல், எம்ஜிஆர் குறித்து பேசியதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version