பிப்ரவரி 2: தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பம்!

தேர்தலுக்கு முன்னதாக தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி கூடுகிறது.


தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் கொரோனா பரவல் காரணமாக வழக்கமாக நடைபெறும் சட்டமன்ற மைய மண்டபத்தில் நடைபெறவில்லை. அதற்கு பதிலாக கொரோனா சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கலைவாணர் அரங்கத்தில் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் சட்டமன்ற கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி கூடும் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் சபை கூடும். அதன்பின் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார்.

read more: ரஜினி மன்றத்தில் இருந்து திமுக வந்தவருக்கு மாநிலப் பதவி!


மே மாதம் தேர்தல் நடைபெற இருப்பதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆளுநர் உரையின் மீதான விவாதம், பட்ஜெட் மீதான விவாதங்களும் நடைபெறும். கூட்டம் எத்தனை நாட்கள் நடத்துவது என்பகு குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version