அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு, எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பதிவில் நன்றி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை நீடித்து வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புரட்சித் தலைவி இடம் புரட்சித்தலைவர் ஆரம்பித்த இயக்கத்தில், புரட்சித்தலைவி இருந்த இடத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து. அடுத்த முறையும் வாய்ப்பு அளித்தமைக்கு தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப கழகத்தை சீரும் சிறப்போடும் வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லவும், ஜெயலலிதா கூறியதுபோல் அடுத்த நூறாண்டு காலத்திற்கும் கழகத்தை வெற்றி இயக்கமாக உருவாக்கிடவும் என்றும் அயராது உழைப்பேன் என உறுதி ஏற்கிறேன், என முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.