தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனும் மற்றும் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் கே ராமச்சந்திரன் மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் உடனும் டெல்லியில் தனி தனியாக சந்தித்து துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பேசினார். பின்னர் இன்று மாலை மத்திய ஜவுளி தொழில் மற்றும் வர்த்தகதுறை அமைச்சர் பியூஸ் கோயிலை நேரில் சந்தித்து தமிழகம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளையும் வழங்கினர். உடன், திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர் பாலு பேசியதாவது,
தமிழகத்தில் கிடப்பில் உள்ள திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர்களிடம் பேசியுள்ளோம். ஜவுளி பூங்கா இந்தியா முழுவதும் 7 இடங்களில் அமையாவுள்ளது, அதில் 2 இடங்கள் தமிழகத்தில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். அதற்கு மத்திய அமைச்சர் தேவையான சில காரணங்களை கூறியுள்ளார், அதனை தமிழக அரசு கட்டாயம் அமைத்து தரும் என எங்கள் தரப்பில் கூறினோம்.
“நியூட்ரினோ” திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டிய நிலையில் அதனை எதிர்த்து பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகள் நீதிமன்றத்தை நாடியுள்ளது. நியூட்ரினோ திட்டத்தினால் மதிகெட்டான் சோலை மற்றும் பெரியார் சோலையில் உள்ள புலிகள் காப்பகம் இடையே நியூட்ரினோ திட்டத்தின் குழாய் வர உள்ளது குறித்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள கமிட்டியில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்ததாக டி.ஆர் பாலு தெரிவித்தார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் காரிடார் தமிழகத்தில் அமைக்க கோரிக்கை வைத்துள்ளோம்; இதனால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மேம்படும் என கோரிக்கை வைத்தோம்.
மத்திய வனத்துறை அமைச்சரிடம் பள்ளிக்கரணை சதுப்பு நில காடுகள் மேம்பாட்டுக்கு நிதி மற்றும் திருச்சியில் உயிரியல் பூங்கா அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. வனதுறைக்கு தேவையான நிதி தேவை குறித்து ஆலோசித்துள்ளோம்.
கீழடியில் இப்போது நடைபெறும் அகழாய்வு பணிகள் செப்டம்பர் 30 உடன் நிறைவு பெறுகிறது. ஆனால், இன்னும் பல்வேறு இடங்களில் புதிய ஆய்வுகள் செய்ய உள்ளோம். குறிப்பாக துளுக்கூர் பட்டி உள்ளிட்ட இடங்களில் புதிய ஆய்வுகளும், மைலாடும் பாறை மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் ஏற்கனவே செய்யப்பட்டு வரும் அகழாய்வுகளும் துரிதப்படுத்தபடும் என தெரிவித்தார். கீழடியை பொறுத்தவரையில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது;பொருநை நாகரிகத்தை காட்சி படுத்தும் விதமாக அருக்கட்சியாகம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் வரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்; அதையே மத்திய அமைச்சரிடமும் தெரிவித்துள்ளோம் மேலும், வாரம் 50 லட்சம் தடுப்பூசி தேவை என தமிழக முதலமைச்சர் கேட்டு கொண்ட நிலையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடமும் வலியுருத்தினோம். அதனை வழங்குவதாக உறுதியளித்தனர்.