ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என, ரயில் மார்க்கமாகப் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு, புதிய திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். மீண்டும் நாளை ஜோலார்பேட்டை இருந்து ரயில் மூலமாகவே சென்னை திரும்புகிறார்.
சென்னை சென்டரல் ரயில் நிலையத்திலிருந்து சீரடி அதிவேக விரைவு ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் காட்பாடிக்கு பயணம் மேற்கொண்டார். ரயில் மார்க்கமாக சென்றதால் பெருநகர சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரை ஏரளமான தொண்டர்கள் அதிக அளவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர். வழிநெடுங்கிலும் ஏராளமாக தொண்டர்கள் கையில் பதாகைகள் ஏந்தியும், திமுக கொடியை கையில் ஏந்தியைப்படியும், தளபதி வாழ்க என கோஷம் எழுப்பியப்படியும் முதலமைச்சரை வரவேற்றனர்.சென்ட்ரல் நிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வழியனுப்ப அமைச்சர் சேகர்பாபு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் வருகை புரிந்தனர்.
முதலமைச்சர் உடன் எம்.பி.ஜெகத் ரட்சகன் உள்ளிட்டோர் காட்பாடி வரை ரயிலில் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்படும் முன்னதாக ரயிலில் இருந்து வெளியே வந்து தொண்டர்களை நோக்கி கை அசைத்தார். மாவட்ட வாரியான கள ஆய்விற்காக வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்பாடி சென்றதால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவலர்கள் அதிக அளவு பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டனர். வேலூரில் புதிதாக கட்டப்பட்ட அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை தொடர்ந்து வேலூர் மாவட்டம் அணைக்கட்டு கங்கநல்லூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைத்து, கலைஞரின் திருவுருவச்சிலையும் திறந்து வைக்க உள்ளார்.
அதனை தொடர்ந்து அணைக்கட்டில் இருந்து சாலை மார்கமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூர் செல்கிறார். நாளை திருப்பத்தூரில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். பின்னர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.18 மணிக்கு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக புறப்பட்டு நாளை மாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருகை புரிய உள்ளார். இன்றயை தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை ஓட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவலர்கள் அதிக அளவு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
ரயில் பயணம் குறித்து தமது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்ட ஸ்டாலின், இந்திய இரயில்வே என்பது ஏழை – நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! இன்று காட்பாடி செல்ல இரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள இரயில் கட்டணங்களும் – குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது. மாண்புமிகு பிரதமர் @narendramodi மற்றும் மாண்புமிகு @AshwiniVaishnaw அவர்களையும், மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது… AC பெட்டிகள் உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். இரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம். ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்! The Indian Railway isn’t just a service – it’s family! எனக் குறிப்பிட்டுள்ளார்.
