கொரோனா பரிசோதனை மாதிரிகள் சாலையில் கிடந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோன தற்போது அதிகரித்துக்கொண்டு தான் இருக்கின்றது. அதனால் பரிசோதனைகள் மிகவும் வேகமாக நடக்கின்றது. அந்த நிலைமையில் சேலத்தில் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் கொரோனா பரிசோதனை மாதிரிகள் சாலையில் கிடந்தது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சுகாதாரத்துறை நடத்திய விசாரணையில் கொரோனா பரிசோதனை மாதிரிகளை களப்பணியாளர்களான சரவணன் ,செந்தில் ஆகிய இருவர் தவறவிட்டது தெரியவந்தது. இதனால் அரசு அவர்களின் அஜாக்கிரதையை கண்டிக்கும் விதமாக அவரைகளை தண்டித்துள்ளது.
இதையடுத்து, களப்பணியாளர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் செல்வகுமார் நடவடிக்கை எடுத்துள்ளார். பெருந்தொற்று நோயாக, கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், பரிசோதனை மாதிரிகளை களப்பணியாளர்கள் அஜாக்கிரதையாக கையாண்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.