பிரேசிலில் நடைபெற்று வந்த சீனா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி சோதனையில் பங்கேற்றவர்களுக்கு கடுமையான பக்க விளைவு ஏற்பட்ட காரணத்தினால் தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய தொற்று இன்று உலகையே ஆட்டி புடைத்துக்கொண்டு இருக்கின்றது. அதற்கு பிராயச்சித்தம் செய்யும் பொருட்டு சினோவாக் ஆய்வகத்தின கொரோனா தடுப்பூசி சோதனைகள் பிரேசில் நாட்டில் தேசிய சுகாதார கண்காணிப்பு நிறுவனம் சினோவாக் ஆய்வகத்தின் சோதனையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இந்த சோதனைக்காக முன்வந்தவர்களில் பலரின் மேல் இந்த சோதனையானது நடத்தப்பட்டது. அதில் அக்டோபர் 29 ம் தேதி சோதனையில் பங்கேற்ற ஒருவருக்கு கடும் பக்க விளைச்சல் ஏற்பட்டுள்ளது. அனால் எந்த விதமான பக்க விளைச்சல் என்பது குறித்த தகவல் தெரியவில்லை.
அவருக்கு மரணம் அல்லது தோல் பிரச்சனை, இயலாமை, மருத்துவ சாதனம் மூலம் தொற்று பரவுதல் அல்லது மருத்துவ ரீதியாக குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஏற்பட்டு இருக்கும் என ஊகிக்கப்படுகிறது.