டெல்டா மாவட்டங்களில் மழையில் நனையும் நெற்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்….

டெல்டா மாவட்டங்களில் மழையில் நனையும் நெற்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் கொள்முதல் செய்யப்படாத நெல்கள் அனைத்தும் மழையில் வீணாகி வருகின்றனர். இதனால்,கூடுதல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்றும், உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழலி்ல், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
மழையில் வீண்
விளைந்தும் விலையில்லை எனும் அவல நிலையாக, டெல்டா மாவட்டங்களில் அரசு கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள் நனைந்து, முளைத்து வீணாகின்றன. உரிய முறையில் கொள்முதல் நடைபெறாமல் ஆள்வோரின் ஊழல் பெருச்சாளிகள் செய்யும் அட்டகாசங்கள் ஓயவில்லை.

நடவடிக்கை
இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். காவிரிக் காப்பாளர் என்ற பட்டம் மட்டும் சூட்டிக்கொண்ட பழனிசாமி அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். பயிர்தான் விவசாயிகளின் உயிர்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version