தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

தி.மு.க. முன்னாள் எம்.பி.
மாநிலங்களவை தி.மு.க. முன்னாள் உறுப்பினராகவும் அக்கட்சியின் விவசாய அணி செயலாளராகவும் இருந்தவர் கே.பி.ராமலிங்கம். இவர், மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்புப் பணிகளை சிறப்பாக கையாண்டதாக பாராட்டு தெரிவித்திருந்தார். இதையடுத்து, கட்சித் தலைமைக்கு எதிரான கருத்துகளை கூறியதாக, கடந்த ஏப்ரல் மாதம் கே.பி.ராமலிங்கம் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
பா.ஜ.க.வில் இணைந்தார்
இதயைடுத்து, அவர் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அவர் இன்று காலை 11 மணியளவில், சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி, தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.