நவ.23-ல் திமுக உயர்நிலைக் குழு கூட்டம்:பரபரப்பில் அண்ணா அறிவாலயம்

நவம்பர் 23ம்தேதி திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை:

நவம்பர் 23ம்தேதி திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான துரைமுருகன் அறிவித்துள்ளார். இதனால் கட்சியின் உடன்பிறவா தொண்டர்கள் பரபரப்பில் உள்ளனர்.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறும்போது, “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி திங்கட்கிழமை காலை 10.00 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும்.அப்போது உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதுதொடர்பான ஆலோசனைக் கூட்டமாக இது இருக்கலாம் என்று கட்சியின் உடன்பிறப்புகள் உற்சாகத்தில் உள்ளனர். இதனால் அண்ணா அறிவாலயம் பரபரப்புடன் காணப்படுகிறது.

Exit mobile version