சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவுபெற்ற நிலையில் இளவரசி விடுதலையானார்.
அவரது மகன் விவேக், வழக்கறிஞர்கள் ராஜா செந்தூரப் பாண்டியன் மற்றும் வழக்கறிஞர் அசோகன் ஆகியோர் அவரை அழைத்துக் கொண்டு சசிகலா தங்கியுள்ள சொகுசு விடுதிக்கு சென்றுள்ளனர்.சிறையில் இருந்து சொகுசு விடுதிக்கு செல்லும் இளவரசிக்கு சசிகலாவின் எஸ்கார்ட் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து சசிகலா விடுதலை ஆகிய நிலையில் சசிகலாவின் பொருட்கள் அனைத்தும் இளவரசியிடம் ஒப்படைத்தது சிறைத்துறை.
கடந்த நான்கு வருடங்களில் சசிகலா சிறையில் இருந்தபோது அவருக்கு தொண்டர்கள் எழுதிய 1500க்கும் மேற்பட்ட கடிதங்களை சிறைத்துறை இளவரசியிடம் ஒப்படைத்தது.வரும் 8ஆம் தேதி இளவரசி சசிகலா அவர்களுடன் தமிழகம் திரும்ப உள்ளார். கடந்த 21ஆம் தேதி சசிகலாவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இளவரசிக்கும் 22 ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஜனவரி 22 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளவரசி 2ஆம் தேதி பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அனுப்பப்பட்டார்.