அரசுப் பள்ளி மாணவர்களின் இட ஒதுக்கீட்டில் எந்த குளறுபடியும் இல்லை” – அமைச்சர் விஜயபாஸ்கர்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் எந்த குளறுபடியும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெட்ரா அணைத்து மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவானது அணைத்து அமைச்சர்களாலும் இது அங்கீகரிக்கப்பட்டு பின்னர் இப்போது தமிழ ஆளுனரிடமும் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது. இந்நிலையில் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத வரை, மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்த முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனால் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்வதில் தாமதம் ஏற்படலாம். இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது அவர் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கபடும் இடத்தில எந்த தடையும் குறையும் இல்லை. மேலும் அரசு பள்ளி மாணவர்கள் மீது அக்கறை கொண்டு நம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சட்டமன்றத்தில் ஐடா ஒதுக்கீடுக்காக பரிந்துரைத்து உள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மசோதா தற்போது ஆளுநரின் ஒப்புதலுக்கு வேண்டி அனுப்பி இருக்கின்றது. அதனை அவர் பரிசீலனை செய்ய தாமதிப்பதால் மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர தாமதமாகும் என்று யாரும் கருத வேண்டாம். அவர் அதை விரைவாக பரிசீலனை செய்வார் மேலும் நல்ல முடிவையும் தெரிவிப்பார் என அவர் கூறினார்.

Exit mobile version